குற்றாலத்தில் தண்ணி இல்லேனா என்ன... மணலாறு க்கு வண்டியை விடுங்க!
திருநெல்வேலி - மணலாறு அருவி ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பிஎம்டபிள்யூ X5 (டீசல்). மணலாறு அருவி பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. காட்டுக்குள் இருப்பதாலும், முக்கால் கி.மீ ட்ரெக்கிங் போக வேண்டும் என்பதாலும் இங்கே கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வீக் எண்டில் வாண்டர்லஸ்ட்டுகள் மணலாற்றை வளைத்துவிடுகிறார்கள்.
மணலாற்றைத் தாண்டிப்போனால் அச்சன்கோயில். அதைத் தாண்டி சபரிமலை. ஒரே நேரத்தில் ஆன்மிகம் + த்ரில்லிங் டூரிங் அடிக்க, இந்த அச்சன்கோயில் மலைப்பாதை அற்புதமான சாய்ஸ். குற்றாலம் வந்தால், மணலாற்றுக்கு வண்டியை விட மறக்காதீர்கள்.