Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/8/2020
யாரும் யார்கூடயும் சேராதீங்க; கை குடுக்காதீங்க... பிரிஞ்சே இருங்க! ஒற்றுமை வேண்டாம்; வேற்றுமைதான் கொரோனாவை விரட்ட ஒரே வழி’’னு ஆபீஸ்ல ஹெச்ஆரும் ஆசிரியரும் மெயில் போட்டுட்டாங்க! பிரதமர்கூட ‘ஜனதா கர்ஃபியூ’வுக்கு அழைப்பு விடுத்துட்டாரு. ‘குயிலைப் பிடிச்சு கூண்டுல அடைச்சு’ பாட்டை உங்களுக்கும் சேர்த்தே டெடிகேட் பண்ணிக்கிறேன்.

இந்த நேரத்துல ‘ஊர் சுத்த வாங்க’னு உங்களைக் கூப்பிடுறதுல உடன்பாடில்லைதான். ‘ஊரெல்லாம் கொரோனா வந்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல இந்த டிராவல் தேவையாடா’னு நீங்க கமென்ட் போடுறதுக்குள்ள ஒண்ணு சொல்லிடுறேன். நல்லவேளையா கொரோனா, தமிழ்நாட்டுக்கு வர்றதுக்குள்ள பார்டரில் இருக்கிற செண்பகா தேவி அருவிக்கு ஒரு செமையான ட்ரெக்கிங் போயிட்டு வந்தாச்சு! சிற்றருவி, ஐந்தருவி, அந்த அருவி, இந்த அருவி... குற்றால அருவிகளுக்கெல்லாம் இதுதான் தல! செண்பகாதேவி அருவி...

முக்கிய குறிப்பு: அன்புள்ள வாசகர்களே...

இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்த செண்பகா தேவி அம்மன் கோவில் அருகில் உள்ள அருவி, ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது தமிழக அரசு. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கித்தான் - அகத்தியர் வாழ்ந்த இடத்துக்கும், வனவாசம் புரியும் செண்பகா தேவி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். எனவே, கொரோனா முடிந்தபிறகு செண்பகா தேவி அருவிக்கு ட்ரெக்கிங் சென்று வரலாம் என்று யாரும் திட்டமிட வேண்டாம்... அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்டு இதைப் பார்க்கவும்..


Credits:
Host & Script: Thamizh Thenral K
Video: L.Rajendran
Edit: Shree Raj
Producer: JT Thulasidharan

Category

🚗
Motor

Recommended