விண்ணின் மேன்மை துறந்து மண்ணிற்கு வந்த மகிபனே பாவத்தை பரிகசிக்க வந்த உன்னை பாழான லோகம் பரிகாசம் செய்தது ஆரவாரத்தோடு வரவேற்க வேண்டிய அரசனை ஆணிகள் அடித்து துன்புறுத்தியது சிரம் தாழ்த்தி வணங்க வேண்டிய உன்னை சிலுவையை தூக்கி சுமக்க வைத்தது பாவியை பரமனிடம் சேர்க்க பலியாக்கினீர் உம்மை பரிகாரியாக சீக்கிரம் வரப்போகும் உம்மை சந்திக்க சிலுவையோடு காத்திருக்கிறேன் உம் சீஷனாக