இரண்டு மாத ஊதியம் வழங்காத தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் ,ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் சௌக்கார் தெருவில் அப்துல் கதிர் என்பவர் இராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் கன்பார்மி லெதெர்ஸ் நடத்தி வந்தார்,இதில் 60 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்,இவர்களுக்கு இரண்டு மாதமாக வேலை செய்த ஊதியம் வழங்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.பெண்தொழிலாலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மேல் விஷாரத்தில் உள்ள அப்துல் கதிரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டனர் ஆனால் அப்துல் கதிர் அங்கு இல்லை என அவரது வீட்டினர் கூறியுள்ளனர்.,அதனால் அங்கேயே முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எங்கள் சம்பளத்தை வாங்காமல் கலைந்து செல்ல மாட்டோம் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அப்துல் கதிர் இங்கு வரமாட்டார் என தகவல் வந்ததின் அடிப்படையில் இராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்பதாக முடிவு செய்து கலைந்து சென்றனர்.

des : Woman workers protest over two months' pay...

Recommended