மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்- வீடியோ

  • 5 years ago
பிள்ளையார்குப்பத்தில் குடிசைமாற்று வாரிய தொகுப்பு வீடுகள் கட்டவும் மரங்களை வெட்டவும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள பிள்ளையார்குப்பத்தில் தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் புதியதாக தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அதிகாரிகள் துவங்கியுள்ளனர் அதற்காக மரங்களும் வெட்டப்பட்டது இதனை கண்டித்து பணிகள் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தங்கள் கிராமத்திலேயே 500 குடும்பங்கள் வசித்துவருவதாகவும் இங்கு ஏற்கனவே குடிநீர் பஞ்சம் உள்ளதால் மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் புதியதாக 500 வீடுகள் கட்டப்பட்டதால் மேலும் பிரச்சணை ஏற்படும் ஆகவே இங்கு வீடுகளை கட்ட கூடாது என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் தவல் அறிந்து வந்த வேலூர் வட்டாச்சியர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் இது அரசின் திட்டம் என கூறினார்கள் ஆனால் மக்கள் அதனை ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

DES : Villagers protest against building slum board houses and cutting down trees

Recommended