வெடிமருந்து தொழிற்சாலைக்கு 18 கிராம மக்கள் எதிர்ப்பு- வீடியோ

  • 6 years ago
வெடிமருந்து தொழிற்சாலை அமைப்பதற்க்கு 18 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு மீறி அமைத்தால் ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை , ரோசன் கார்டுகளை அரசிடமே ஒப்படைத்து விட்டு அகதிகளாக கிராமத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மருதூர் கிராமம் பிச்சைக் கல்பட்டியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வெடி மருந்து ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு வெடிமருந்து ஆலைக்கு செல்லும் நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்தும், கோசங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது எங்கள் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு உள்ளனர். இந்த ஆலைக்கு முறையாக அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அரசு அதிகாரிகள், அரசியல் முக்கிய பிரமுகர்களின் மூலம் அனுமதி வாங்க அனைத்து முயற்சிகளும் நடை பெற்றுக் கொண்டு உள்ளது. இது சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் வெடிமருந்து ஆலைக்கு எதிராக தடை ஆனை பெற்றுள்ளோம். அதையும் மீறி ஆலை அமைக்க முயற்ச்சி செய்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை .எங்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆலைக்கு அனுமதி வழங்கினால் எங்கள் பகுதி கிராம மக்கள் அனைவரும் ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை ,ரோசன் கார்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து விட்டு இந்த கிராமத்தை விட்டு அகதிகளாக வெளியேறுவது என உள்ளேம். இந்த கிராமத்தில் இருந்து கொண்டு எப்பெழுது இந்த ஆலை வெடிக்கும் அல்லது இதன் மூலம் நீர் , காற்று, நிலம் மாசு அடைந்து அதன் மூலம் நோய் வரும் என பயந்து பயந்து வாழ்வதை விட சாவது மேல் அல்லது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகதிகளாக வெளியேறுவது என்று உள்ளேம் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக காணப்பட்டது.

des: 18 villagers to set up a factory factory to protest against the Aadhaar Card, Voter Card, Rosencards and leave the village as refugees

Recommended