மலை கிராம மக்களுக்கு ரூபாய் 5.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம்- வீடியோ

  • 5 years ago
காடையாம்பட்டி தாலுக்காவில் கணவாய்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மலைகிராம குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தங்களது அறிவாற்றலை வளர்த்து கொள்ள கிளை ஓன்று நூலகம் செயல்பட்டு வருகிறது.மேலும் இரண்டாயிரம் புத்தகங்களை கொண்ட இந்த நூலகத்திற்கு தினமும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்போட்டோர் வந்து பொதுஅறிவை வளர்த்து கொண்டு செல்கின்றனர்.இதுநாள்வரை இந்த நூலகம் தனியார் கட்டிட்டத்தில் இயங்கி வருவதால் இட வசதி குறைவாக இருந்தது. இந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் புதியதாக நூலக கட்டிடடம் கோரி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறை சார்பாக ரூபாய் 5.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடடம் கட்டி முடிக்கப்பட்டது.இதனையடுத்து இன்று மாவட்ட வனத்துறை அலுவலர் பெரியசாமி முன்னிலையில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மேலும் இங்கு மாணவமணிகள் அமர்ந்து படிப்பதற்காக டேபில் சேர் மற்றும் புத்தகங்கள் அடுக்குவதக்கான ரேக்குகளை உனடியாக செய்து கொடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.இந்நிகச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

des : Tamil Nadu Forest Department for the Mountain Villages Newly built library building at an estimated cost of Rs 5.5 lakh

Recommended