மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பம் நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் - வீடியோ

  • 5 years ago
திருச்சி விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அதில்,பருவ நிலை மாற்றம் ஏற்படும் போது நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு வரும் போது அதை தடுக்க தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்கும். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை. நிபா வைரஸ் போன்ற வைரஸ்கள் தமிழ் நாட்டில் பரவாமல் தடுக்க 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேரளா போன்ற அண்டை மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார துறைக்கும்,மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பம் நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கலந்தாய்வு வழக்கம் போலவே நடைபெறும் என்றார்.

des : Application for Clinical Study Counseling tomorrow's website

Recommended