மருத்துவ படிப்பு: கர்நாடக அரசு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை- வீடியோ

  • 6 years ago
அரசு இருக்கையில், முதுகலை மருத்துவ படிப்பு, கற்க 10 வருடங்கள் கர்நாடகாவில் கல்வி கற்க வேண்டியது அவசியம் என்ற கர்நாடக அரசின் அறிவிக்கைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது. கர்நாடக தேர்வு ஆணையம் (KEA) இவ்வாண்டு புதிதாக ஒரு விதிமுறையை அறிமுகம் செய்தது. அதன்படி, கர்நாடகாவில் 10 வருடங்கள் படித்திருந்தால்தான், முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான டிகிரி அல்லது டிப்ளமோ படிக்க அரசு இருக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசின் உத்தரவை இடைக்கால ரத்து செய்துள்ளது. டாக்டர் கீர்த்தி லகினா மற்றும் 39 பேர் தாக்கல் செய்த மனுக்களை இணைத்து விசாரித்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து வெளி மாநில மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

The Supreme Court has stayed a notification that made a 10 year study in Karnataka mandatory to qualify for the government seats in post graduate medical courses. This order comes as a major relief for students from outside Karnataka. A notification issued by the Karnataka government had introduced the Karnataka Origin among the criteria for admission to PG Medical and dental courses for aspirant from outside the state.

Recommended