இரண்டாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி- வீடியோ
  • 5 years ago
தருமபுரி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு இரண்டாவது நாளாக பெய்த கன மழையால் கத்திரி வெயிலின் வெப்பம் தனிந்த குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.தருமபுரியில் கத்திரி வெயில் துவங்கியதிலிருந்து வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெயிலின் உஷணத்தால் பொதுமக்கள் கடும் அவதிவுற்று வந்தனர். மேலும் சாலைகளில் அனால் காற்று வீசி வந்தது. இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக தருமபுரி மாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இரவும் தருமபுரியில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை வெயிலின் வெப்பம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணபட்டு வந்தநிலையில் இன்று இரவு குளிர்ந்த காற்றுடன் பலத்த காற்று வீசியது இதனையடுத்து மின்னலுடன் இன்று இரண்டாவது நாளாக தருமபுரி மற்றும் அதனை சுற்றி உள்ள நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் தருமபுரி நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து சென்றது. இதே போல் காரிமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கன மழை பெய்தது. இன்று இரண்டாவது நாளாக பெய்த மழையால் கத்திரி வெயிலின் வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோசன நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

DES : The heat of the scorching sun is cold with the heavy rains for the second time.
Recommended