தூத்துக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற சுமார் 9 லட்சம் ரூபாய் பறிமுதல்- வீடியோ

  • 5 years ago
தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், முத்தையாபுரம் சோதனைத் சாவடி அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அதில் வந்த தூத்துக்குடி போல்பேட்டையை சண்முகராஜ் என்பவரது மகன் காமராஜ், தேங்காய் வியாபாரியான அவரிடம் உரிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயத்திடம் ஒப்படைத்தனர்.

des : Nine lakh rupees confiscated by the relevant documents in violation of the Election Code rules in Tuticorin

Recommended