கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை- வீடியோ

  • 5 years ago
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வெள்ளாகுளம் கிராமத்தில் அனைத்து மக்களுக்கும் பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுப்பையா என்பவர் வீடு கட்டியதுடன், கோயிலை சுற்றியுள்ள இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கிராம மக்கள் பலமுறை காவல்நிலையம் மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டினார். இந்நிலையில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் காளியம்மன் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்றனர். அப்போது கோயிலை சுற்றியுள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர் பெண்களை தரக்குறைவாக பேசியதாக கூற்ப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு சென்று கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு பெண்களை தரக்குறைவாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வராத நிலையில், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவ்ல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.



des: The men and women of Vellakulam village went to Thiruvenkadu police station to take action against those who spoke to the neglected women in the temple land and blocked the police station.

Recommended