தேர்தல் மினதசங்கிலி விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் துவக்கம்

  • 5 years ago

வேலூர்மாவட்டம்,வேலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இம்மாவட்டத்தில் உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளான குடியாத்தம்,ஆம்பூர் சோளிங்கர் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் முதற்கட்டமாக அந்தந்த தாலுக்கா அலுவலகங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கண்ட் ரோல் யூனிட் ஒப்புகைசீட்டு இயந்திரம் ஆகியவைகளை குலுக்கள் முறையில் இயந்திரங்களை தாலுக்கா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது இதனை மாவட்ட ஆட்சியர் ராமன் துவங்கி வைத்தார் இதில் திமுக,அதிமுக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலை நடைபெற்றது இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்று தாலுக்கா அலுவகங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படும் இதேபோன்று தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் மாணவிகள் மனிதசங்கிலி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இதே போன்று ஆட்டோ பிரச்சாரத்தையும் தெருக்கள் தோறும் செய்ய மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்

Recommended