வீரராகவர் கோயிலில் ஆந்திர ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்- வீடியோ

  • 5 years ago
திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநில ஆளுநர் நரசிம்மன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலுக்கு வந்த ஆளுநர் நரசிம்மனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், டி.எஸ்.பி.,கங்காதரன் ஆகியோர் வரவேற்றனர். முதலில் வீரராகவரை தரிசித்த ஆளுநர், கனகவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளை தரிசனம் செய்தார். கோயில் ஐதீகப்படி உப்பு மிளகு ஆகியவற்றை கோயில் வளாகத்தில் உள்ள வீரராகவர் பாதத்தில் கொட்டி வழிபட்டார். அதனைத் தொடர்ந்து கோயில் தெப்பக் குளத்துக்கு சென்று பால், வெள்ளத்தை குளத்தில் கரைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்....

Andhra Governor visit veera ragavar temple