இந்தியாவின் மிகப்பெரிய எம்பிவி ரக காராக வளம்வரும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ்

  • 5 years ago
வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் சொகுசு எம்பிவி கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கருதப்படுகிறது. உலக அளவில் 90 நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எம்பிவி காரானது எக்ஸ்பிரஸ்ஸென் என்ற 7 சீட்டர் மாடலிலும், எக்ஸ்க்ளூசிவ் என்ற 6 சீட்டர் மாடலிலும் கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் மாடல் கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது.இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. மேலும், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended