அரசூழியர அசைக்க முடியுமா..?

  • 5 years ago
ரசு ஊழியர்னா
அவங்க ரேஞ்சே வேற.

மினிஸ்டர், எம் எல் ஏ ன்னு யார்கூட சண்ட வந்தாலும்
அரசு ஊழியர்கள் அசர மாட்டாங்க.

“அவங்கல்லாம் ஆஃப்டரால் அஞ்சு வருசம்
பதவில இருப்பாங்க;
நாங்கதான் நிரந்தரம்”னு சொல்லுவாங்க.

அது ரொம்ப கரெக்ட்னு இந்த சம்பவத்துல
கன்ஃபர்ம் ஆயிருக்கு.

நாட்டுக்கே பிரதமரா இருந்தாலும்
அரசு ஊழியர ஜஸ்ட் லைக் தட் பதவில இருந்து
தூக்க அதிகாரம் கிடையாதுன்னு
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு.

மத்திய புலனாய்வு அமைப்புன்னு சொல்ற
C B I ல டைரக்டரா இருந்தவர் அலோக் வர்மா.
அதே சி பி ஐ ல அவரோட அசிஸ்டென்டா இருந்தவர்
டெபுடி டைரக்டர் ராகேஷ் அஸ்தானா.

ரெண்டு பேருக்கும் ஒத்து போகல.
அவர் மேல இவரும் இவர் மேல அவரும்
மாத்தி மாத்தி ஊழல் புகார் சொன்னதோட
திடீர் ரெய்டு, டி எஸ் பி அரெஸ்ட் அப்படீனு
ஓப்பனா மோதிகிட்டாங்க.

அக்டோபர் 23 ஆம் தேதி ராத்திரில
மோடி அரசு அதிரடி ஆக்சன் எடுத்துது.
டைரக்டரையும் டெபுடி டைரக்டரையும்
கம்பல்சரி லீவுல அனுப்பிட்டு
நாகேஸ்வர ராவ்னு ஒருத்தர
இடைக்கால டைரக்டரா நியமிச்சுது.

பிரதமர் சொல்லி
உள்துறை அமைச்சர் ஆர்டர் போட்டார்.

டைரக்டர் அலோக் வர்மா அத எதிர்த்து
சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார்.
கோர்ட் இப்ப தீர்ப்பு சொல்லிருக்கு.

”சி பி ஐ டைரக்டர நியமிக்கிறது,
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி
இந்த 3 பேரும் அடங்கின உயர்மட்ட குழு.
அதனால அவர நீக்குற பவர்
அந்த குழுவுக்குதான் இருக்கு.
அதோட கவனத்துக்கே வராம
டைரக்டர பதவில இருந்து தூக்குனது செல்லாது”னு
நீதிபதிகள் சொல்லிட்டாங்க.

அலோக் வர்மா பதவி காலம் ஜனவரி 31 ல முடியுது.
கொஞ்சநாள்தான் பதவில இருப்பார்.
ஆனா, ஒரு காட்டு காட்டிட்டோம்னு
திருப்தியா ரிடயர் ஆவார்ல.

இல்லாமலா பின்ன வடிவேலு
அந்த அலப்பற பண்ணாரு
அரசாங்க வேல கெடச்சிருச்சுன்னு..




Recommended