தரமற்ற மிதிவண்டிகள்..உடனடி நடவடிக்கை.. அமைச்சர் உறுதி- வீடியோ

  • 5 years ago
தரமற்ற மிதிவண்டிகள் குறித்து புகார் தரப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது மாணவா்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது. தோ்வு மையங்கள் நாளை அறிவிக்கப்படும் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனா் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளதால் அரையாண்டு தோ்வை தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அரையாண்டு தோ்வை தள்ளிவைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்துவருவதாக பதிலளித்தார்.

ஒரு கல்வி மாவட்டத்திலிருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத்தோ்வு எழுதச்செல்லும் மாணவா்கள் கவலைப்பட தேவையில்லை கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடு இருக்காது..

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தினால் மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற மிதிவண்டிகள் வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எங்கே வழங்கப்பட்டாலும் அரசு உாிய நடவடிக்கை மேற்கொள்ளும். தரமற்ற மிதிவண்டிகள் குறித்து புகார் தரப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தரமற்ற மிதிவண்டிகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளும். என்றார்

Des: Minister Chengottiyan said that immediate action would be taken if a complaint was filed against non-standard bicycles

Recommended