ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது ஏன்?.. குழப்பத்தில் அமைச்சர்.. வீடியோ

  • 6 years ago
ஹஜ் பயணத்திற்கு மாணியத்தை வழங்கி வந்த மத்திய அரசு திடீரென்று ரத்து செய்தது ஏன் என்று தெரியவில்லை அமைச்சர் நிலோபார் கபீல் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் ,வாணியம்பாடியில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம் சார்பில் முஸ்லீம் மகளிர்கள் 146 பேருக்கு தொழில் தொடங்க டாம்கோ கடன் 7. 52 லட்சம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் வழங்கி பேசுகையில் அதிமுக அரசு இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு முத்தலாக் சட்டத்தில் தலையிட்டு சில திருத்தங்களைக் கொண்டு வந்தனர் இந்தியாவிலேயே இச்சட்டத்தை தமிழக அரசுதான் எதிர்கொண்டது என தெரிவித்த அவர் வக்பு வாரிய உறுப்பினர்களோடு சென்று முதல்வரை சந்தித்த போது தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய பெண்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது அதிமுக அரசின் பொறுப்பு என நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் ஹஜ் பயணத்திற்கு மாணியத்தை வழங்கி வந்த மத்திய அரசு திடீரென்று ரத்து செய்தது ஏன் என்று தெரியவில்லை ஹஜ் கமிட்டியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து பேசிய போது ஹஜ் மாணியத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது எனவும் சென்ற ஆண்டு 6 கோடிரூபாய் ஹஜ் பயணிகளுக்கு அளித்துள்ளதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என தெரிவித்தார்.

Des: Minister Nabopar Kebil said that the federal government, which provided the girl for a visit to Hajj, suddenly canceled.

Recommended