ஹஜ் மானியம் ரத்து செய்தது போல் கும்பமேளா யாத்திரைக்கான மானியத்தையும் ரத்து செய்வார்களா ? திருமா

  • 6 years ago
ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் பாஜக தனது முஸ்லிம் வெறுப்பை வெளிப்படையாக காட்டி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் மானிய தொகையானது, முஸ்லிம்களின் நலவாழ்வுக்கும் கல்விக்கும் செலவிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், ஹஜ் மானியம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அது நேரடியாக முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. முஸ்லிம்கள் எவரும் இலவசமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவும் இல்லை. சவுதி அரேபிய அரசு ஹஜ் யாத்திரை நேரத்தில் விதிக்கும் சிறப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக வழக்கமான காலத்தில் வாங்குவதைப்போல சுமார் மூன்று மடங்கு கட்டணத்தை விமான நிறுவனங்கள் விதித்துவந்தன.

VCK Leader Thirumavalavan condemns for ending Haj subsidy to Muslim People. He also slams that the ending subsidy for Haj is shows the BJP Government hatredn

Recommended