கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் தொழிலாளி பலி- வீடியோ

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பன்றிக் காய்ச்சலுக்கு முந்திரி ஆலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். தக்கலை அருகே பாலப்பள்ளியைச் சேர்ந்த ரெத்தினபாய் என்பவர், கிள்ளியூரில் மகள் வீட்டில் தங்கி இருந்த போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

தக்கலை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில், ரெத்தினபாய் தங்கியிருந்த கிள்ளியூர் பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதோடு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Des: A female worker who worked at the cashew factory at the swine blast near Thikkal in Kanyakumari district. Redembai from Palapalliyil near Thakkalai suffered a fever when he stayed at his daughter in Kiluvur.

Recommended