சபரிமலைக்கு செல்ல மாட்டோம்- பெண்கள் உறுதிமொழி- வீடியோ

  • 6 years ago
ஐயப்பன் கோவில் பாரம்பரியத்தை காப்பாற்ற 10 முதல் 50 வயக்குள் உள்ள இந்து பெண்கள் கோவிலுக்குச் செல்ல மாட்டோம் என்று பெண்கள் உறுதிமொழி ஏற்று கொள்ளும் நிகழ்சி நடைபெற்றது..



கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய தரப்பினரும் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் உள்பட அனைவரும் தரிசனம் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தது இதனைத்தொடர்ந்து பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இடையே எதிர்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில், பெரம்பலூரில் ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், மேற்கு வானொலி திடலில் உள்ள ஐயப்பன் கோவிலில் பாரம்பரியத்தை காப்பாற்ற கோவிலின் ஆகம விதிப்படி யார் செல்லலாம் யார் செல்லக் கூடாது என்ற அடிப்படையில் அதன் முழு பாரம்பரியத்தையும் காப்பாற்றும் வகையில் பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும், இல்லையேல் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Des: Women's pledge to accept the Hindu women's temple from 10 to 50 years old to save the Ayyappan temple tradition took place.

Recommended