விருச்சிகராசிக்கு தாமிரபரணி நதியில் மகா புஷ்கரணி- வீடியோ

  • 6 years ago
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரணியில் தீப ஆரத்தி பெருவிழாவில் 20 ஓதுவார்கள் 16வகையான தீபாராதனைகள் வழங்க 5 - லட்சம் மதிப்புள்ள பூஜை பொருட்களுடன் பங்கேற்க உள்ளனர்.



குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகராசிக்கு இடம் பெயர்ச்சி அடையும் நாளான புரட்டாசி 25ஆம் தேதியன்று தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா நடைபெற உள்ளது.விருச்சிக ராசிக்கு உரிய நதி தாமிரபரணியாகும், குருப்பெயர்ச்சி காலமான அக்டோபர் 11ம் முதல் 22ம் தேதி வரையிலான 12 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.12 நாட்கள் நடைபெறும் மகா புஷ்கர விழாவில் மாலை நேரங்களில் தாமிரபரணி அன்னைக்கு மங்கல ஆரத்தி நடைபெறுகிறது . தீப ஆரத்தியின் போது படித்துறையில் கும்பம் வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்துவார்கள் மேலும் தாமிரபரணி ஆற்றுக்கு கற்பூர ஆரத்தி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்படும், இந்த மகா புஷ்கரணி தீப ஆரத்தி பெருவிழாவில் திருப்பூரில் இருந்து கோவை மாவட்டம் பேரூர் பட்டிப் பெருமான் பக்திப் பண்ணை சார்பில் 20 ஓதுவார்கள் பங்கேற்று 16 வகையான தீபாராதனைகள் தாமிரபரணி அன்னைக்கு வழங்க உள்ளனர்.

Des” The temple is to be celebrated at the Pushkarani River in the Maha Pushkarani in the Deepa Arati Peru festival of 20 o'clock with 16 kinds of delicacies to pay 5 lakhs worth of puja goods.

Recommended