அதிமுக பக்கம் திரும்புகிறாரா அழகிரி?- வீடியோ

  • 6 years ago
அமைச்சர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அழகிரி சென்றதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதிமுக பக்கம் தன் சாயலை திருப்பியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி கருணாநிதி நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் மவுன அஞ்சலி கூட்டம் நடத்தினார். கடந்த 10 நாட்களாக சென்னையில் டென்ட் அடித்த அழகிரி இரு தினங்களுக்கு முன் மதுரை சென்றார். இந்த நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீவின் தாய் மரணம் அடைந்ததால் இன்று காலை அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். அழகிரி செல்லூர் ராஜீ வீட்டிற்கு சென்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப காலத்தில் அதிமுகவிற்கு சப்போட்டாக இருந்தார். அதன் பின்னர் திமுகவில் முக்கிய பொருப்புகள் அவருக்கு வழங்கப்பட்டதால் அதிமுகவை புறக்கணிப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் மறைமுக ஆதரவளித்து வந்தார். இதனால் அவரை திமுவில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைத்தனர். இந்லையில் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் தனக்கு திமுகவில் முக்கிய பொருப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அவைகள் தோற்றுப்போக மீண்டும் அதிமுக பக்கம் தன் சாயலை திருப்பியுள்ளார். அதன் முதல் அடியாக தான் செல்லூர் ராஜீவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றதுடன் அங்கு அமைச்சரிடம் ஆலோசனையும் செய்துள்ளார். அப்போது திமுகவில் தன்னை ஒதுக்கி வைத்தது குறித்து புலம்பியுள்ளார்.

Des : Madurai has been furious since the minister went to the house to inquire about the house.

Recommended