ஆர்கே நகரில் தினகரன் பக்கம் சாயும் அதிமுக நிர்வாகிகள்...பதட்டத்தில் கோட்டை- வீடியோ
  • 6 years ago
ஆர்.கே.நகரில் தினகரன் வலையில் அதிமுக நிர்வாகிகள் கொத்து கொத்தாக சிக்குவதால் கோட்டை வட்டாரம் ரொம்பவே கதிகலங்கி கிடக்கிறதாம். வருமானவரித்துறை சோதனை, பறக்கும் படை ஆய்வு என தினகரனை குறிவைத்துக் களமிறங்கியுள்ளது பா.ஜ.க. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது டெல்லி போலீஸ். இந்த வழக்கில் 21ம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைப் பற்றி தனது ஆதரவாளர்களிடம் பேசிய தினகரன், களத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தத் தேர்தலில் நம்முடைய செல்வாக்கைக் காட்டியே ஆக வேண்டும். நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் வருமான வரித்துறையை அனுப்புகிறார்கள். மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தேர்தலை அணுக வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் நிலைப்பாடு வேறு மாதிரியானதாக இருக்கிறது. களத்தில் தினகரனின் பிரசாரமே உச்சத்தில் இருக்கிறது. அவர் வெற்றி பெற்றுவிட்டால், இதுநாள் வரையில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வியாகவே அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். எனவே, மீண்டும் பணப்பட்டுவாடா புகாரைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலை ரத்து செய்துவிடலாம் என டெல்லிக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.

Sources said that AIADMK Senior leaders are very disappointing over the Dinakaran's campaign in RK Nagar.
Recommended