பாதுகாப்பு கருதி மலை மீது ஏறுவதற்கு தடை- வீடியோ

  • 6 years ago
பாதுகாப்பு கருதி மலைமீது ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாவும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரும் நவம்பர் மாதம் தீப விழா நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பதால் அவர்களுக்கு பல்வேறு துறை சார்பில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மலை மீது ஏற்படும் தீ விப த்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் மலைமீது ஏற அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்கதர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Des : The pilgrims are shocked by the warning that a strict action will be taken against those who have been banned for mounting the mountain.

Recommended