சிம்பு மீது பாஜகவினர் திடீர் கோபம். வீட்டுக்கு பாதுகாப்பு- வீடியோ

  • 7 years ago
2015.. பெருமழை மழை. ஊழித் தாண்டவம் ஆடின மாதிரி திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். அரசு செயலற்று நிற்கிறது. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியானது ஒரு கேவலப் பாட்டு. அது சிம்புவும் அனிருத்தும் சேர்ந்து உருவாக்கிய பீப் பாட்டு. மிகக் கேவலமான வார்த்தைகள் கொண்ட அந்தப் பாடல் குறித்து மீடியாவில் எழுந்த விவாதம், வெள்ள பாதிப்புச் செய்திகளை மழுங்கடித்தது... திசை திருப்பியது. நான் எழுதி, பாடி ரகசியமாக வைத்த பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். அதைப் பற்றி விசாரிங்க முதல்ல என்று எகிறினார் சிம்பு. கோவை போலீஸ் விசாரணைக்கு அழைக்க, சிம்பு தலைமறைவானார். பல நாட்கள் அப்படி இருந்தார். அவ்வப்போது டிவிக்களுக்கு மட்டும் போனில் பேட்டி கொடுத்தார். மக்கள் இந்த பிரச்சினையை மறந்த நேரத்தில், விசாரணைக்குப் போய் வந்தார். பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. ஜல்லிக்கட்டுப் போராட்டம் வந்தது. சிம்பு உணர்ச்சிமயமாக அதில் பங்கேற்றார். மக்களும் பீப்பை மறந்துபோனார்கள். இப்போது அதற்கு பிராயச்சித்தம் தேடுகிற வகையில் பணமதிப்பிழப்பைக் கிண்டலடித்து ஒரு பாடல் பாடியுள்ளார் சிம்பு.

Simbu - Kabilan Vairamuthu's demonetisation anthem become viral online

Recommended