பழனியில் கூட்டுறவு தேர்தல் முடிவை அறிவிக்காமல் சென்ற தேர்தல் அலுவலரைக் கண்டித்து பொதுமக்கள் இரவிலும் போராட்டம்

  • 6 years ago
பழனி அருகே தும்பலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தேர்தல் அலுவலர் செல்வராஜ் முடிவுகளை அறிவிக்காமல், மாவட்ட தேர்தல் அலுவலர் இளமதியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பழனி தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், பொதுமக்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Recommended