பலத்த மழையின் காரணமாக குமுளி மலைப்பாதையில் மண்சரிவு- வீடியோ

  • 6 years ago
பலத்த மழையின் காரணமாக குமுளி மலைப்பாதையில் இறைச்சல்பாலம் அருகே சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் தேனி கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கேரளா செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

தேனிமாவட்டம் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது. தேக்கடி, வாகமண் சுற்றுலா செல்லும் சுற்றுலா வாகனங்களும், குமுளிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், கேரளா செல்லும் சரக்குவாகனங்களும், கூலித்தொழிலாளர்களுடன் கேரளா விற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ் வழியே செல்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவுமுதல் விடாது பெய்த மழையின்காரணமாக குமுளி மலைச்சாலையில் இறைச்சல் பாலம் மேல் வளைவில் ரோடு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆட்டோ, கார், மற்றும் கனரக வாகனங்கள் கேரளப்பகுதிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லோயர் போலீசார்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை நிறுத்தி, கேரளா செல்லும் வாகனங்களை கம்பம்மெட்டு வழியாக திருப்பி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Des : Due to heavy rains, the road was cut off near Meghalpalai in Kumula hills. It has been diverted to the Kannimmattu bypass to Theni Kollam National Highway.

Recommended