கைலாஷ் யாத்திரை சென்று தவிக்கும் தமிழர்களை மீட்க 2 தமிழக அதிகாரிகள் நேபாளம் சென்றனர்
  • 6 years ago
சீனாவின் திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் - மானசரோவருக்கு இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரைக்கு சென்றனர். யாத்திரையை முடித்து திரும்பும் போது நேபாளத்தில் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்கமுடியாமலும், வாகனங்களை சென்றடைய முடியாமலும் சென்னையை சேர்ந்த19 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் என சுமார் ஆயிரத்து 500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்று நேபாளம் அரசு இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 150 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியத் தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் இருந்து மீட்கப்படும் தமிழகர்களுக்கு உதவும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகர்களை மீட்க தமிழக அதிகாரிகள் ராஜசேகர், சத்யசிவம் ஆகியோர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended