நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
  • 6 years ago
சீனாவின் திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் - மானசரோவருக்கு யாத்திரை சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வெள்ளப்பெருக்கு காரணமாக நேபாளத்தில் சிக்கியுள்ளார். அவர்களை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக அமைச்சர் ஒருவர் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுன் இணைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தை சேர்ந்த 19 பேர் இன்று பத்திரமாக லக்னோ வந்துள்ளதாலவும், இன்று இரவுக்குள் அவர்கள் சென்னை வருவார்கள் எனவும் தெரிவித்தார். நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் உடல் தற்போது காத்மண்டூரில் உள்ளதாக தெரிவித்த அவர், இன்று அல்லது நாளைக்குள் அவரது உடல் தமிழகம் கொண்டு வரப்படும் என்றார். மேலும் தமிழர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended