பெண்கள் பாதுகாப்பில் பிறநாடுகளை விட இந்தியா மோசமானது அல்ல - சசி தரூர்

  • 6 years ago
பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டது. இந்நிலையில்நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட வேண்டும் என கூறினார். அதே சமயம் பெண்கள் பாதுகாப்பில் உலகின் மோசமான நாடு இந்தியா என்பதை ஜீரணிக்க முடியவில்லை என்றும், பெண்களுக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க சுதந்திரம் கிடைக்கிறது என தெரிவித்தார். ஆப்கன், சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றார். கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா என்பது முக்கியமில்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம் என கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended