நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி
  • 6 years ago
உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 22-வது தரவரிசையிலுள்ள ஐஸ்லாந்து அணி, 48-வது தரவரிசையிலுள்ள நைஜீரிய அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் நைஜீரிய அணி வீரர் அஹ்மத் முசா மிகவும் துல்லியமாக செயல்பட்டு தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்ததாக 75-வது நிமிடத்தில் அஹ்மத் முசா இரண்டாவது கோலை அடித்து நைஜீரிய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனிடையே ஐஸ்லாந்து அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட நைஜீரிய அணி, இறுதியில் 2-0 என்ற கணக்கில் அசத்தலான வெற்றி பெற்றது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended