மாடுகளை தூக்க லிப்ட் வசதி- அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் அறிவிப்பு- வீடியோ

  • 6 years ago
மாடுகளை தூக்க லிப்ட் வசதியுடன் விரைவில் 22 மாவட்டங்களுக்கு நடமாடும் கால்நடை மருத்துவமணை முதல்வர் துவக்கிவைக்க இருப்பதாக கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்



திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. 200,300மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. வெற்றிபெறும் மாட்டு வண்டிகளுக்கு தங்கநாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள், கோப்பை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்து பந்தய தூரத்தை கடந்துசென்றன. நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தை இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.ரேக்ளா பந்தயத்தை துவக்கிவைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைதுறை சார்பில் மாடுகளுக்கு மருந்துகள் வழங்க ஏற்பாடுசெய்யபட்டுள்ளதாகவும் விரைவில் 22 மாவட்டங்களுக்கு நடமாடும் கால்நடை மருத்துவமணை முதல்வர் துவக்கிவைக்க இருப்பதாகவும் அதில் மாடுகளை தூக்க லிப்ட் வசதி ஸ்கேன் உள்ளிட்ட அணைத்துவசதிகளும் இருக்கும் மென்றும் தெரிவித்தார்

Recommended