‘காலா’க்கு உரிமை கோரிய மனு... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!- வீடியோ

  • 6 years ago
The Supreme court today dismissed the petition seeking stay on Rajini's Kaala movie.


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக கூறிய ராஜசேகர், அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

Recommended