ஒடி விடுவார் ரஜினி சு சுவாமி ஆவேசம்...வீடியோ

  • 6 years ago
ரஜினி ஒரு நடிகர். அவர் இன்று இருப்பார் நாளை இருக்க மாட்டார். நான் அப்படி அல்ல. நான் அரசியில் வாதி இங்கே தான் இருப்பேன் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.


மதுரை விமான நிலையத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தூத்துக்குடி சம்பவம் குறித்து பிரமருக்கு முழுமையான அறிக்கை கிடைக்க வில்லை. அதனால் அவர் வருத்தம் தெரிவிக்க வில்லை என்றார். தூத்துக்குடி சம்வத்தில் உயிரிழந்தவர்கள் பாமர மக்களா அல்லது விடுதலை புலிகள், நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்த விபரம் தெரிய வர வேண்டும் என்று கூறினார். மேலும் சீமான் வீர வசனம் பேசிவிட்டு தற்போது காணாமல் போயுள்ளார். ஆனாலும் அவர் மீது வழக்கு உள்ளது. எனவே அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறிய சுப்பிரமணிய சுவாமி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வாதி அல்ல என்றும் இன்று இருப்பார் நாளைக்கு அவர் இருப்பாரா என்று தெரியாது. ஆனால் நான் அரசியல் வாதி என்றுமே இங்கேதான் இருப்பேன் என்று கூறினார்.

Recommended