கலைஞர் பிறந்த நாளன்று தமிழிசையின் சர்ச்சை ட்வீட் !

  • 6 years ago
உங்கள் சட்டையை நீங்களே கிழித்துக் கொள்வதும் திமுகவின் பரிணாம வளர்ச்சி என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு அதிமுக கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது. இந்த நிலையில் திமுக ஜனநாயக கடமையாற்றியதன் நினைவுகளை தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் திமுக கடந்த கால சட்டமன்ற ஜனநாயக கடமையாற்றிய நினைவுகள்? ஜெ.அடி உதை, ஆடை கிழிப்பு மைக்குகளும் மண்டைகளும் உடைப்பு, சட்டை வேட்டிகளோடு சேலை கிழித்தவரலாறு, போட்டி சபாநாயகராக மதியழகன்/ஆசனத்தில் அமர்ந்து அதையும் கிழித்த நீங்கள் தற்சமயம் உங்கள் சட்டையை நீங்களே கிழித்துக் கொள்வதுமே திமுகவின் பரிணாம வளர்ச்சி? என்று தமிழிசை தெரிவித்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Tamilisai Soundararajan tabulates the DMK's evolution by listing Jayalalitha's saree torn, mike broke out. But Now a days, DMK itself torn their shirts, this is the DMK' evolution.

Recommended