சென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி!- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடந்து வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் மக்கள் மீது தமிழக அரசு கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்களை சுட்டு 14 பேரை தமிழக போலீஸ் கொன்றுள்ளது. இன்னும் 100க்கும் அதிகமான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இடத்தில் இவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதை தாண்டி செல்ல முயன்றால், போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போராட்டக்காரர்கள் எப்படியாவது, தடுப்புக்களை தாண்டி வாலாஜா சாலை வழியாக தலைமைச்செயலகத்தை அடைய திட்டமிட்டுள்ளனர்.


Huge protest lead by Tamil groups against TN Gov in Chennai. Police protection increased in all the area of Chennai after protest dread.

Recommended