யானையுடன் சண்டையிட்ட பைக்கின் விலை மீண்டும் உயர்ந்தது

  • 6 years ago
பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை கடந்த ஜனவரி மாதமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ 2000 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சாதாரண வேரியன்டின் விலை ரூ 1.46 லட்சத்திற்கும் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ரூ 1.60 லட்சம் என எக்ஸ் ஷோரூம் விலைப்படி விற்பனையாகிறது.இந்த பைக் விற்பனைக்கு வரும் போது நிர்ணயக்கப்பட்ட விலையை விட தற்போது ரூ 10 ஆயிரம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் டோமினார் 400 பைக்கை பொருத்தவரை 80 சதவீதமான வாடிக்கையாளர்கள் ஏ.பி.எஸ். வேரியண்டை தான் விரும்புகின்றனர் என்றும், அதனால் விரைவில் சாதாரண வேரியண்ட் விற்பனையை நிறுத்தத போவதாக பேசப்படுகிறது.

Read more at: https://tamil.drivespark.com/two-wheelers/2018/bajaj-dominar-400-prices-hiked-014898.html

#Dominar #BajajDominar400

Recommended