கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

  • 6 years ago
கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார். பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு , வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு அவர் செல்லும் வழி மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு பாஜகவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்துனர். எடியூராப்பா கர்நாடகா முதல்வராக பதவியேற்பதை அவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கர்நாடக போலீசாருக்கு இன்று விடுப்பு மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Yeddyurappa leaves for Raj bhavan to take oath as CM. Yeddyurappa is the new CM of Karantaka. He took the oath and became CM in the morning. Yeddyurappa will be the 23rd CM of Karnataka.

Recommended