ஹெச்.ராஜா நெட்டிசன்களிடம் கொட்டு வாங்கிய அவலம்!

  • 6 years ago
1966-இல் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததாக தவறான பதிவை டுவிட்டரில் போட்டுவிட்டு அதற்காக நெட்டிசன்களிடம் எச் ராஜா வாங்கிக் கட்டிக் கொண்டார். கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதனால் காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது. அதுபோல் பாஜகவும் 108 இடங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மை என்று கூறி ஆட்சி அமைக்க கோருகிறது. ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற கட்சிகளுடன் கைகோத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது அதே பார்முலாவை பயன்படுத்தும் காங்கிரஸை மட்டும் குறை கூறுகிறது.

Netisans shares their comment about H.Raja who gives wrong information about Vajpayee.

Recommended