ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசுகிறார்- எச். ராஜா- வீடியோ
  • 6 years ago
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியவில்லை என்ற விரக்தியில் தொடர்ந்து பொய் பேசி வருவதாக எச், ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோஅப் செய்து வருவதாகவும் டிவிட்டர் பக்கத்தில் தான் பதிவிடும் செய்திகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தவறுகள் நடப்பதாக தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி வரியால் இந்தியாவிற்கு எந்தவித இழப்பும் ஏற்பட வில்லை என்றும் ஜிஎஸ்டி வரி பாஜகவின் சாதனை என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியவில்லை என்பதால் தொடர்ந்து பொய் பேசி வருவதாகவும் எச். ராஜா குற்றம் சாட்டினார்.
Recommended