வழக்கம் போல் பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வர பாஜக தகிடுதத்தம்- வீடியோ

  • 6 years ago
கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளை வளைத்து போட்டு பாஜக ஆட்சி அமைப்பது போல் கர்நாடகத்திலும் மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் ஈடுபட்டுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மொத்தம் 222 தொகுதிகளில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் தனிபெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை. ஆரம்பத்தில் பாஜக தனிபெரும்பான்மையுடன் முன்னிலை வகித்த போதிலும் பின்னர் பாஜகவே அதிர்ச்சி அடையும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் மாறி போனது. கர்நாடக சட்டசபையில் தனிபெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு இன்னும் 4 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதுமானது. எனவே குஷ்டகி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ அமரேகௌடா லிங்கனா கௌடா பய்யாபூரை பாஜக தொடர்பு கொண்டு டீல் பேசியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு பாஜக தலைவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அமைச்சர் பதவி தருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் நான் அங்கு செல்லமாட்டேன். குமாரசாமிதான் எங்களது முதல்வர் என்றார்.

Congress MLA Amaregouda Linganagouda Patil Bayyapur says I got a call from the BJP leaders. They said come to us & we'll give a ministry to you. We'll make you a minister. But, I'm going to stay here. HD Kumaraswamy is our Chief Minister.

Recommended