மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்ல இ - வே பில் அமல்- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் பின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு, கண்டிப்பாக இ - வே பில் பெறுவது அவசியம்.

கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கு பயன்படும் சரக்கு பரிமாற்றம் (Stock Transfer) என்னும் முறைக்கு எந்தவிதமான ஆவணங்களை பயன்படுத்துவது என்பதில் வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் பெரும் குழப்பம் இருந்து வந்தது.

Recommended