குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்த மூதாட்டி கொலையில் உருக்கமான தகவல்.. 23 பேர் கைது

  • 6 years ago
குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய 'பாவத்திற்காக' போளூர் அருகே அடித்து கொலை செய்யப்பட்டார் சென்னையை சேர்ந்த மூதாட்டி. அவரது குடும்பத்தாரும் அடித்து நொறுக்கப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் மோகன் குமார் (43), சந்திரசேகர்(37). தற்போது மலேசியாவில் வசிக்கும் இந்த இருவர் மற்றும் ருக்மணி(65) உள்ளிட்ட 5 பேர் தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.மூதாட்டியை அடித்து கொன்றதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. வாட்ஸ்அப் வீடியோ ஆதாரத்தை வைத்து வரிசையாக கைது நடவடிக்கையை எடுத்து வருகிறது காவல்துறை.அத்திமூர், தம்புகொட்டன்பாறை,கலையம் கிராமங்களை சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவிதத்தனர். எஸ்.பி. பொன்னி தலைமையில் 7 குழுக்களாக 100 காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ஊரைவிட்டு கிராம மக்கள் காலி செய்து வருகின்றனர். சட்டத்தை கையில் எடுக்க கூடாது. வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப கூடாது என எஸ்.பி. பொன்னி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

23 people has been arrested in connection with 63 year old woman killed in Tiruvannamalai district.

Recommended