சாயப்பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் திடுக் திருப்பம்!- வீடியோ

  • 6 years ago
பள்ளிப்பாளையம் அருகே சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கு அவரது மனைவியின் கள்ளக்காதலே காரணம் என தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். 35 வயதான இவர் சொந்தமாக சாயப்பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாயப்பட்டறையில் ஆனந்தன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Recommended