உருவாகிறது அர்ஜூன் ரெட்டி பார்ட் 2- வீடியோ

  • 6 years ago
சந்தீப் வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படம் நல்ல வரவேற்பைப்

பெற்றது. அப்படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா தமிழில் 'நோட்டா' திரைப்படத்திலும், நாயகி ஷாலினி

பாண்டே '100% காதல்', 'கொரில்லா' ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனர்.

அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் 'வர்மா' என்கிற பெயரில் இயக்குநர் பாலா ரீமேக் செய்கிறார். விக்ரமின்

மகன் துருவ் இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின்

இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது.

'அர்ஜூன் ரெட்டி' இரண்டாம் பாகத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளார் சந்தீப் வங்கா.

இப்படத்தின் கதை 40 வயதில் அர்ஜூன் ரெட்டியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியதாக

இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திலும் விஜய் தேவரகொண்டாவே அர்ஜூன் ரெட்டியாக நடிப்பார் எனக் கூறியுள்ளார் சந்தீப் வங்கா.

மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி' இரண்டாம்

பாகம் உருவானால் தமிழிலும் ரீமேக் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.


'Arjun Reddy' released in Telugu is well received. In this case, the second part

of Arjun Reddy will be ready in Telugu. Vijay Devarakonda is the hero of this

film.


#arjunreddy #part2 #vijaydevarakonda