குட்டையில் மிதந்த மண்டை ஓடு

  • 6 years ago
குட்டை நீரில் மிதந்த பெண்ணின் மண்டை ஓட்டை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்

ஆவடி அடுத்த ஆலத்தூர்,மேட்டு தும்பூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு செங்கல் சுளைகளுக்கு தேவையான மண் எடுத்துள்ளனர். அதன் பின்பு மழையால் அதில் தேங்கி உள்ளது. இந்நிலையில் தண்ணிர் தேங்கிய பள்ளத்தில் புடவை மற்றும் பாவாடை மிதந்ததையும் நேற்று அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.மேலும் அதன் அருகில் உள்ள திட்டில் ஒரு மண்டை ஓடு மற்றும் 3 எலும்பு துண்டுகள் கிடந்துள்ளன.
இதனையடுத்து,அப்பகுதி மக்கள் கிழ்கொண்டையார் வி ஏ ஓ ராஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து முத்தாப்புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஐ.ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பின்னர் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து சம்பவ இடத்துக்கு மருத்துவர்களை அழைத்து பிரேதபரிசோதனை நடத்த திட்டமிடபட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண்ணிற்கு 30 முதல் 40வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியலை சேகரித்து வருகின்றனர். மேலும் பெண்ணை கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des : The police are investigating the confiscation of the skull of a woman in a puddle