சம்மர் ஸ்பெஷல் படம் ரிலீஸ் லிஸ்ட்

  • 6 years ago
50 நாள் ஸ்ட்ரைக் அசதியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது கோடம்பாக்கம். கடந்த வாரம் வெளியான படங்களில் மெர்க்குரி கொஞ்சம் பரவாயில்லை. இந்த வாரம் நான்கு படங்கள் வருவதாக இருந்தது. ஆனால் மூன்றுதான் உறுதியாகியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் 30 படங்கள் வரை ரிலீசாகக் கூடும். இந்த மாதம் இறுதியில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், பக்கா, தியா, பாடம் ஆகிய 4 படங்கள் வெளியாகவிருந்தன. ஆனால் இப்போதைக்கு பக்கா, தியா, பாடம் மட்டும்தான் வெளியாகிறது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே மாதத்துக்கு தள்ளிப் போய்விட்டது. பக்கா படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி, பிந்து மாதவி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்துள்ளார். தியா படம் சாய் பல்லவி-நாகசவுரியா ஜோடியாக நடிக்க விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது. இதில் சாய் பல்லவி ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே கரு என்று இதற்கு பெயர் வைத்து பின்னர் தியா என்று மாற்றி உள்ளனர்.


List of Tamil movies awaiting to release in summer 2018


#newtamilmovie #releasedates #karu #dhiya #pakka #paadam

Recommended