காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ?

  • 6 years ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி, 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 10-ம் தேதி வாக்கிலும், இசை வெளியீடு மார்ச் மாத இறுதியிலும் வெளியிடப்படலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றன. கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'காலா'. மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் காட் ஃபாதராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ரஜினி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி டீசர் வெளியீடும், மார்ச் மாத இறுதியில் ஆடியோ ரிலீஸும் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

Rajinikanth's 'Kaala' directed by Ranjith will be released on April 27 is officially announced. In this situation, other works of the film have been stepped up. Teaser and Trailer works has come to an end. Accordingly, the teaser of 'Kaala' will be released on March 10th.

Recommended