மலையாள பிக் பாஸ்ஸில் மோகன் லால்!- வீடியோ

  • 6 years ago
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள்

வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தியில் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழ்,

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்த நிகழ்ச்சியை துவங்கினார்கள்.
கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன்

தொகுத்து வழங்கினார்.

தமிழ், தெலுங்கு நிகழ்ச்சியை பார்த்த கேரள மக்கள் மலையாளத்தில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையே

என்று ஃபீல் செய்தார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்து

வைக்கப்படுகிறது.

மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரின்

பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியில் மோகன்லாலை தேர்வு செய்துள்ளார்களாம்.
ஜூன் மாதம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குமாம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும்

ஜூன் மாதம் தான் துவங்குகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸனே

தொகுத்து வழங்குகிறார்.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி கொச்சியில் நடக்கும் என்று கூறப்படுகிறது. பிற மொழிகளை போன்றே

மலையாளத்திலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர் சினிமா மற்றும் சின்னத்திரையை

சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். தற்போது

அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து

நடிகர் நானி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Makers of Bigg Boss have decided to launch it in Malayalam this year. According

to reports, Malayalam superstar Mohanlal is going to host the popular reality

show.

#bigboss #season2 #malayalam #mohanlal #kamal #nani

Recommended